நபி ஸல் அவர்களின் காலத்தில்,அவர்களது நல்ல செயல்களையும்,
அன்னாரின் தோழர்களின் செயல்களையும் பார்த்து பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.அதே போல்,இப்போது சிறந்த முஸ்லிம்களின் நல்ல செயல்களைப்பார்த்து பலர் இஸ்லாத்தில்நுழைகின்றனர்.இதற்கு ஆதாரமாக அரபி மொழியில் இருந்து அல்குர் ஆனை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்த்த முஹம்மது மெர்மதூக் பிக்தால் என்பவரின் சம்பவம் அமைந்துள்ளது.
ஒரு முறை மாலை நேரத்தில்,பிக்தால் அவர்கள் லெபனானின் தலைநகரில்,
உயர்ந்த மாடிக்கட்டடமொன்றில் நின்றவாறு,பிரதானவீதியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.முஸ்லிம்கள் அதிகமாக வாழுகின்ற லெபனானின் பிரதான வீதியில்,ஒரு யூதக்கிழவன்,ஒரு முஸ்லிம் இளைஞனை தனது கைத்தடியால் கடுமையாக அடிக்கின்ற காட்சி இவர் மனதை நெகிழ வைத்தது.
உடனே,மாடியிலிருந்து மிக வேகமாக இறங்கி வந்து,
அந்த இளைஞனிடம்,“ஏன் ஒரு யூதக்கிழவனிடம் இவ்வாறு அடி வாங்குகின்றாய்??இந்தப்பகுதியில் முஸ்லிம்கள் தானே அதிகமாக வாழ்கின்றனர்,நீயும் வலிமையான இளைஞனாக இருக்கின்றாய்?”என்று ஆச்சரியத்துடன் விசாரித்தார்.
அதற்கு அந்த இளைஞன்,“நான் இந்த யூதக்கிழவனிடம் சில நாட்களுக்கு முன்னர் கடன் வாங்கினேன்.இப்போது என்னால் அதைக்கொடுக்க முடியவில்லை.அதனால் ,அவர் என்னை தண்டிக்கின்றார்.எனது உயிரினும் மேலான,மரியாதைக்குரிய இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்கள் கடனை உரிய முறையில் திருப்பி கொடுக்குமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.
எனவே அந்த யூதருக்கு என்னிடம் கடினமாக நடந்து கொள்ள உரிமையுள்ளது.முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கிறோம் என்பதற்காக மற்ற மதத்தவர்களின் உரிமைகளை நாங்கள் பறிக்க மாட்டோம்.முஸ்லிம்கள் அநீதிக்கு உதவி செய்யக்கூடாது
என்று நபியவர்கள் போதனை செய்துள்ளார்கள்”என அந்த இளைஞன் பிக்தாலுக்கு மிக அழகாக உபதேசம் செய்தார்.
இந்த உபதேசம் அவரின் மனதில் நபியவர்களைப்பற்றியும் இஸ்லாத்தைப்பற்றியும் நன்மதிப்பை ஏற்படுத்தியது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முஹம்மது நபி ஸல் அவர்களின் போதனைகளை,இந்த இளைஞன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துப்பின்பற்றுகிறானே!!!
என அவரின் மனதில் ஆச்சர்யம் ஏற்பட்டது.
அந்த மாமனிதரின் வார்த்தைகளுக்கு இவ்வளவு வலிமையா???இத்தனை மகத்துவமா???என ஆயிரமாயிரம் கேள்விகள் அவர் மனதில் எழுந்தன.
மறுகணமே,நூலகங்களில் நபி ஸல் அவர்களைப் பற்றிய நூல்களைப் படிக்க ஆரம்பித்தார்.முஹம்மது நபி ஸல் அவர்களின் தூய்மையான வாழ்க்கை வரலாறு,அவரது மனதை நெகிழ வைத்தது.இருள் அகன்றது.வாழ்வில் புதுத்தெம்பு ஏற்பட்டது.
1914ஆம் ஆண்டு புனித இஸ்லாத்தை ஏற்றார்.
இஸ்லாத்தில் பற்றுள்ள ஓர் இளைஞனின் செயல்,ஒரு கிறிஸ்தவரைஇஸ்லாத்தில் இணைத்துவிட்டது.
இவ்வாறு நாமும் மற்றவர்களை,நற்பண்புகள் மூலம்
இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்க வேண்டும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக